ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரைக்கடைக்கு அனுமதி மறுப்பு

கும்பகோணம், அக். 12: தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கும்பகோணம் நகரத்தின் மையத்தில் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதற்காக கோயில் சார்பில் வைக்கப்படும் அலங்கார பொம்மைகள், ராஜ தர்பார் போன்ற குழு காட்சிகளை பார்க்க தினசரி பக்தர்கள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் 60க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஏல முறையில் விடப்பட்டு அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ெசய்யப்படும். நவராத்திரி விழா நாட்களில் கடைகளில் வியாபாரம் களைகட்டும். இந்நிலையில் இந்தாண்டு தரைக்கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதுடன் வியாபாரம் மந்தமாகிவிட்டது. மேலும் தரைக்கடைகளின் மூலம் கோயிலுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா களையிழந்து காணப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: