தாந்தோணிமலை ஜீவா நகர் பிரிவில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர்,அக்.10: கரூர் தாந்தோணிமலை ஜீவா நகர் பிரிவு அருகே மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் இருந்து அசோக் நகர் வழியாக ஜீவா நகர், கணபதிபாளையம், காமராஜ் நகர், முத்துலாடம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்த சாலையில்தான் சென்று வருகிறது.

இந்நிலையில், ஜீவா நகர் பிரிவு பகுதியின் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மழை நீர் குளம் போல தேங்கியிருந்து பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் தேக்கம் காரணமாக, கொசுக்களின் உற்பத்திக்கும் காரணியாக இந்த பகுதி விளங்கி வருகிறது. எனவே, தொடர்ந்து மழை வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பினை கருதி, பள்ளத்தினை சரி செய்து, தண்ணீர் தேங்காத வகையில் ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: