5,446 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வறண்டது

கரூர், மே 20: தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் துவங்கி கரூர், திருப்பூர், கோவை ஆகிய மூன்று மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை அமராவதி ஆறு பூர்த்தி செய்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் ராஜபுரம் பகுதியில் இருந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு கலக்கிறது. இதில், செட்டிப்பாளையம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணையில் இருந்து சேகரிக்கப்படும் தண்ணீர், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் தண்ணீர் அதிகளவு தேங்கி நின்று கடல போல காட்சியளிக்கும். தற்போதைய நிலையில், தண்ணீர் வரத்தின்றி, செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. அமராவதி அணைப்பகுதியில் அதிகளவு மழை பெய்யும் பட்சத்தில், செட்டிப்பாளையத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 5,446 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ₹1000 தண்ணீரின்றி செட்டிப்பாளையம் தடுப்பணை வளாகம் வறண்டது appeared first on Dinakaran.

Related Stories: