செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும்

கரூர், மே 20: கரூர் மாநகராட்சி பகுதிகளில் சூழ்ந்துள்ள சீத்த முட்செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிககை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. கரூர் மாநகரம் மட்டுமின்றி, வெங்ககல்பட்டி, சணப்பிரட்டி, வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், இனாம்கரூர் வரை மாநகர பகுதி பரந்து விரிந்துள்ளது. இதில், மாநகராட்சி பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட சீத்த முட்செடிகளின் ஆக்ரமிப்பு அதிகளவு உள்ளன.நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, விஷ ஐந்துகளின் புகழிடம் போன்ற பல்வேறு பாதிப்புகள் இந்த சீத்த முட்செடிகளால் ஏற்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் இடங்களில் சீத்த முட்செடிகள் அதிகளவு ஆக்ரமித்துள்ளதன் காரணமாக குடியிருப்பு வாசிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சீத்த முடசெடிகள் அகற்றப்பட்டன. இந்த இயக்கம் ஒரு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது, மாநகர பகுதியில் திரும்பவும் அதிகளவு சீத்த முட்செடிகள் ஆக்ரமித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் கூடுதல் கவனம செலுத்தி, மாநகர பகுதியில் அதிகளவு வளர்ந்துள்ள சீத்த முட்செடிகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post செவ்வாய்தோறும் மாநகராட்சி பகுதிகளில் முட்செடிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: