மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருப்புவனம், அக். 9: மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருப்புவனம் வைகையாற்றில் ஏராளமானோர் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருப்புவனத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில், பிரசித்தி பெற்ற புஸ்பவனேஸ்வரர் செளந்திரநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தல், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பர். தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி  மற்றும் தர்ப்பணம் செய்து, பித்ரு பூஜைகளை அர்ச்சகர்கள் மூலம் செய்து வருகின்றனர். மேலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய விஷேச நாட்களில், தென் மாவட்டங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். இதன்படி, நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு  திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு பூஜைகள் செய்தனர்.

Related Stories: