பள்ளத்தூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500 பேர் பங்கேற்பு

 

காரைக்குடி, ஜூன் 24: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் பள்ளத்தூர் திறன் மேம்பாட்டு மையம் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம், வெற்றி விநாயகர் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. தொழிலதிபர் சிவசங்கர் வரவேற்றார். பள்ளத்தூர் நகரத்தார் மீனாட்சி சாரிட்டபில் டிரஸ்ட் தேனப்பன், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கலைக்கல்லூரி செயலாளர் அண்ணாமலை, மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா, திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, பள்ளத்தூர் பேரூராட்சி சேர்மன் சாந்தி சிவசங்கர் உள்பட பலர் துவக்கி வைத்தனர்.

சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கண்ணன், செந்தில்குமார், அழகர், செல்வம், பழநியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சரஸ்வதி ராமநாதன் நன்றி கூறினார். 7வயது முதல் அனைத்து வயதுக்கு உட்பட்டவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளத்தூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: