சுற்றுலா சென்ற திருச்சி பள்ளி மாணவர்கள் 40 பேர் தவிப்பு

திருச்சி, செப்.25: இமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளி 9 ஆசிரியர்கள் உள்பட மாணவ, மாணவிகள் 40 பேர் தவிப்பதாக கூறப்படுகிறது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜிநகரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், 23 மாணவர்கள், 8 மாணவிகள் என மொத்தம் 40 பேர் கடந்த 20ம் தேதி இமாச்சல பிரதேசத்திற்கு கல்வி சுற்றுலா ெசன்றனர். இந்நிலையில் தற்போது இமாச்சல பிரதேசத்தில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் 40 பேரும் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், 40 பேரும் குழுமராலி பகுதியில் சந்தியா ரிசாட் என்ற இடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: