மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் கடன் பெறவிண்ணப்பிக்கலாம்

திருச்சி, செப்.25:  திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட கை, கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேசாத இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 வரை வங்கி கடன் வழங்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் விண்ணப்பித்து  தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: