மல்லிபட்டினத்தில் துறைமுக பராமரிப்பு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்படுமா?

சேதுபாவாசத்திரம், செப். 25: மல்லிப்பட்டினத்தில் துறைமுக பராமரிப்பு குழு ( ஹார்பர் கமிட்டி) தனித்தனியாக அமைக்க வேண்டுமென மீன்வளத்துறை இயக்குனருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மீன்வளத்துறை இயக்குனருக்கு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் ரூ.66 கோடியில் புதிய மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் நடந்து தற்போது முடியும் தருவாயில் உள்ளது. விசைப்படகு மீனவர்கள் மல்லிப்பட்டினத்தில் ஒரு சமூகத்தினரும் கள்ளிவயல்தோட்டத்தில் மற்றொரு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.

இதற்கு ஏற்றார்போல் துறைமுகமும் இரண்டாக பிரித்து கட்டப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தை பராமரிக்க தற்போது ஒரே ஒரு பராமரிப்பு குழு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாக உள்ள துறைமுகத்தை ஒரு பராமரிப்புக்குழு பராமரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே இரண்டு துறைமுக பகுதிகளுக்கும் தனித்தனியாக பராமரிப்பு குழு அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: