ஊருக்குள் செல்ல அனுமதிக்காமல் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்

தஞ்சை, செப். 25:  கபிஸ்தலம் அருகே ஊருக்குள் செல்ல அனுமதிக்காமல் அந்த ஊரை சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று தஞ்சை கலெக்டரிடம் குடும்பத்துடன் வந்து புகார் மனு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் மண்ணியார் வாழ்க்கையை சேர்ந்த ஆதி மகன் ராஜவேல். கூலி தொழிலாளியான இவர் தனது தந்தை ஆதி, தாய் சரஸ்வதி, மனைவி ரேணுகாதேவி, மகன் மனோஜி, மகள் அனீஸ் ஆகியோருடன் வந்து  கலெக்டர் அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்தனர். அதில் 2006ம் ஆண்டு நான் தவறு செய்துவிட்டதாக கூறி எனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். இதையடுத்து பாபநாசம் தாசில்தார், கபிஸ்தலம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எனது குடும்பத்திரை ஊரில் சேர்த்தனர். இப்போது மீண்டும் ஊரில் உள்ள சிலர், எங்கள் குடும்பத்தினரை வெட்டி விடுவேன், கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றனர்.

இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் ஊருக்கு வெளியே வசித்து வருகிறோம். கூலி வேலை செய்யும் நாங்கள் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் 11 ஆண்டுகளாக எங்களால் எதிர்த்து போராட இயலவில்லை. எனவே எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மற்றவர்களை போல் நாங்களும் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: