மண்மாதிரி சேகரிப்பு செயல்முறை விளக்கம்

பழநி, செப். 25:  தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் சித்தார்த், சந்தோஷ், சத்யமூர்த்தி, சுபாஷ், தமிழரசன், தமிழ்ச்செல்வன், தாமரைக்கனி, விக்னேஷ் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பழநி பகுதியில் தங்கி உள்ளனர்இதன்படி பழநி விவசாய நிலங்களில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், மண்மாதிரி சேகரிப்பு குறித்தும் செயல்முறை விளக்கமளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தோட்டக்கலைத்துறையின் பயிர்த்திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: