கண் சிகிச்சை முகாம்

திண்டுக்கல், செப். 25:  திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டையில் மதர் தெரசா லயன்ஸ் சங்கம், லொயோலா கால்பந்து கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.  சங்க தலைவர் கதிர்வேல்ராஜா தலைமை வகித்தார். முகாமை அவட்டார அதிபர் எர்னஸ்ட் அந்தோணிசாமி, திண்டுக்கல் செஞ்சிலுவை சங்க தலைவர் நாட்டாமை காஜாமைதீன் துவங்கி வைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க செயலாளர் பாலசுப்ரமணி, பொருளாளர் டேவிட் ஜெயசீலன், மாவட்ட தலைவர் சாமி செய்திருந்தனர்.

Related Stories: