அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு 30ம் தேதி நடக்கிறது

ஈரோடு, செப். 25:  இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் இதுகுறித்து கூறியுள்ளதாவது: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு ஈரோடு அருகே பெருமாள்மலை பகுதியில் உள்ள பிளாட்டினம் மகாலில் வரும் 30ம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்குகிறது.   

 இந்த மாநாட்டிற்கு கட்சியின் நிறுவன தலைவர் வீரா.சிதம்பரம் தலைமை தாங்குகிறார். முதன்மை பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மகளிரணி தலைவி பூவாத்தாள், கோவை மண்டல தலைவர் சுப்பன், பொதுச்செயலாளர் அன்புநாதன், நாமக்கல் மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். இதனை தொடர்ந்து மாநாட்டில் அருந்ததிய சமுதாய

மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவர் நானே சாஹேப் இந்திசே, பொதுச்செயலாளர் ரஹலாத் சோன்வனே, அமமுக அவை தலைவர் அன்பழகன், அமைப்பு செயலாளர்கள் செந்தில்பாலாஜி, சேலஞ்சர்துரை, பி.ஜி.நாராயணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன், புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம், உழைப்பாளி மக்கள் கட்சி தலைவர் ராமகோபால தண்டாள்வார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: