கூடலூர் அருகே வாகன விபத்தால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர், செப்.21: கூடலூரில் வேன் மீது கார் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  கூடலூரில், ஊட்டி-கள்ளிக்கோட்டை சாலை சந்திப்பில் நேற்று வேன் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்திலிருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு சென்று கூடலூர் வழியாக திரும்பும்போது, நடுவட்டம் பகுதியில் இருந்து கூடலூர் வரை இறக்கமான மலைச் சாலையில் 17 கிமீ தூரம் பயணித்து வருகின்றனர்.

  இதன்பின்னர் கூடலுார் வரும் போது வாகனங்களில் பிரேக் பழுதுபட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.  இந்நிலையில் கூடலுாரில் தற்ேபாது குறுகலான சாலைப் பகுதியில்  சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றனர். தலசீமியா, ரத்தசோகை பாதிப்புகளை கண்டறிய

பள்ளி மாணவர்களிடம் ரத்த மாதிரி சேகரிக்க முடிவு ஊட்டி, செப். 21: தலசீமியா மற்றும் ரத்த ேசாகை நோய் பாதிப்புகளை கண்டறிய, நீலகிரி பள்ளி மாணவர்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

 நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ரத்த சிவப்பணு குறைபாட்டால்  ஏற்படும் நோய்களை தக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

 கூட்டத்தில் சுகாதாரத்துறை துைண இயக்குநர் பொற்கொடி பேசியதாவது:

 தலசீமியா மற்றும் ரத்த ேசாகை நோய், மலைவாழ் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் ஹீமோகுளோபின் என்னும் ரத்த சிவப்பணு புரதத்தின் தன்மையில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுகிறது.  

 இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தசோகை, வலி மற்றும் ரத்த குழாய் அடைப்பு போன்றவை ஏற்படும். இதற்கு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை ரத்தம் ஏற்றுதல் ஒன்றே சிகிச்சை முறையாகும். இதற்காகவே தமிழக அரசு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்ேநாய் மலைவாழ் மக்களிடையே பரவலாக காணப்படுவதால், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடையே இந்நோய் உள்ளதா என அறிய சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை கண்காணிக்க அரசு குழந்தைகள் நல மருத்துவர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: