இலங்கை அகதிகள் முகாமில் துணை ஆணையர்ஆய்வு

மொடக்குறிச்சி, செப்.21: ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 162 குடும்பத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த முகாமில் நேற்று அகதிகள் மறுவாழ்வு துறை துணை ஆணையர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்களின் விபரம் மற்றும் அவர்களுக்கு அரசின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.   அப்போது அவரிடம், முகாம் மக்களுக்கு ரேஷன் கடைகளில் தனி அரிசி வழங்குவதாகவும், அந்த அரிசி மோசமாக உள்ளதால், சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கார்டில்  குழந்தைகளின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: