பரமக்குடி பஸ் நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் மேற்கூரை சரிந்தது 20 சைக்கிள்கள் சேதம்

பரமக்குடி, செப். 21: பரமக்குடி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால், 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் சேதமடைந்தன. பரமக்குடியில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு வெளியூர் செல்லும் பயணிகள் தங்களின் வாகனங்களை நிறுத்திச் செல்வதற்காக, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பாக 3 ஆயிரம் சதுரடியில் வாகனங்களை நிறுத்துவதற்கு சைக்கில் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இதனை ஒப்பந்ததாரிடம் விட்டு கட்ணம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த்த கனமழையால், சைக்கிள் நிறுத்தும் பகுதியில் உள்ள கட்டிட்டதின் மேற்கூரையின் ஒருபகுதி வலுவிழந்து, நேற்று காலை திடீரென சரிந்து விழுந்தது.

இதில், இந்த பகுதியில் நிறுத்தப்படிருந்த 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் சேதமடைந்தன. மேலும், மேற்கூரையின் மற்ற பகுதிகளும் எந்த நேரமும் இடிந்து விழும் என்ற ஆபத்தில் உள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டு வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காத நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் சேதமடைந்த சைக்கிள்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இடியும் தருவாயில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தை இடித்துவிட்டு புதிய சைக்கிள் நிறுத்தும் இடத்தை கட்டிக்கொடுக்க வேண்டும் என வாகனங்களை நிறுத்துபவர்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: