கவர்னரை சந்திக்க வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு

அரியலூர், செப்.21: ஆளுநரை சந்திக்க முடியாத வழக்கறிஞர்கள் கோரிக்கை மனுவை கிழித்து ஆளுநரை சந்திப்பை புறக்கணித்தனர்.அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்த பின் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். காலையில் மாவட்ட நீதிபதியின் உதவியாளர் மூலம் கவர்னரை சந்திக்க அனுமதி பெறப்பட்டது. மாலையில் வழக்கறிஞர்கள் சங்கம் நிர்வாகிகள் வழக்கறிஞர் பழனிச்சாமி தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வேண்டி ஆளுநரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது இரண்டு பேர்கள்தான் செல்லவேண்டும் என்று கெடுபிடி செய்தனர். இதனையடுத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சந்திக்க வந்துள்ளோம். தனிப்பட்ட சந்திப்பு அல்ல என்று கூறியபோதும். அலச்சியமான பதிலால் கவர்னருக்கு கொடுக்க வேண்டிய மனுவை அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் முன் கிழித்துவிட்டு ஆளுநர் சந்திப்பை புறக்கணித்தனர்.

Related Stories: