முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி, செப்.19: திருச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, தமிழக கவர்னரை தலைவராக கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு தமிழக ஆளுநரை தலைவராக கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப கல்வி, தொழிற்கல்வி, தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள்  தொழிற்பயிற்சி நிலைய, சான்றிதழ் படிப்புகள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கலை அறிவியல் வணிகவியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் ஆகியவற்றிற்காக கல்வி, பயிற்சி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    தகுதி வாய்ந்த இளநிலை படை அலுவலர் (ஜேசிஒ) தரத்திற்குட்பட்டவர்கள் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பிக்கலாம்.      மேலும் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறத் தகுந்த படிப்புகளுக்கு முதலாவதாக அத்திட்டத்திற்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும்.  அத்திட்டத்திற்கு  கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவர்களுக்கு, கல்வி உதவித் தொகை அனுமதிக்கப்படாதவர்களுக்கு தொகுப்பு நிதியிலிந்து கல்வி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும். 2018-19-க்கான உதவித் தொகை பெறுவதற்கான  விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.  விண்ணப்பம் பெற கடைசிநாள் அக்டோபர் 15ம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங்களை  சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பவர் 15ம் தேதி.    மேற்கண்ட சலுகைகளை பெற்று பயனடைவது தொடர்பாக திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் அணுகலாம் என்று கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செயதிகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: