பாவாஜிகோட்டையில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் முகாம்

பட்டுக்கோட்டை, செப். 19:  பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் மண்வள இயக்கத்தின்கீழ் முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்ட பாவாஜிகோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குதல் குறித்த முகாம் நடந்தது. மதுக்கூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன் வரவேற்றார். மண் சேகரிப்பு முறை மற்றும் மண் ஆய்வுக்கு தேவையான குறிப்பு குறித்து மதுக்கூர் வட்டார வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர் ஆலோசனை வழங்கினார். மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தயாளான் பேசுகையில், தேவைக்கேற்ப உரமிடுவதால் பயிரை சேதப்படுத்தும் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக காணப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வு வளம்பெற வளமான மண்ணை ஆதாரமாக கருத வேண்டும் என்றார். பின்னர் விவசாயிகளுக்கு மண் சேகரிப்பு முறை மற்றும் மண்வள அட்டை பயன்பாடு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு ஞானராஜ் செய்திருந்தார். அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, சரவணி மற்றும் பெனிக்சன் பங்கேற்றனர்.

Related Stories: