ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.21.39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை, செப். 19: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.21.39லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், ஆனைமலை மற்றும் கோட்டூர், சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், ஒடையக்குளம், ரமணமுதலிபுதூர், அங்கலக்குறிச்சி, அம்பராம்பாளையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 68விவசாயிகள் மொத்தம் 563மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.

 அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்(பொறுப்பு) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.  இதில், முதல் தரம் 312மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.90.65 முதல் அதிகபட்சமாக ரூ.92.10வரையிலும். இரண்டாம் தரம் 251மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.50.10 முதல் ரூ.90.20வரையிலும் விலைபோனது. விவசாயிகள் கொண்டு வந்த 28 டன் கொப்பரை ரூ.21.39லட்சத்துக்கு ஏலம்போனது. இதனை 11வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். கடந்த வாரம்போல் இந்த வாரத்தில் கொப்பரை வரத்து அதிகமாக இருந்தாலும், சராசரியாக ஒருகிலோ  ரூ.4முதல் ரூ.7வரை என குறைந்த விலைக்கு ஏலம்போனதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: