அதிமுக., அரசின் ஊழலை கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக., ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 19:   ஈரோட்டில் அதிமுக., அரசின் ஊழலை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகில் தெற்கு மாவட்ட திமுக., சார்பில் அதிமுக அரசின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக., தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். இதில் அதிமுக அரசின் குட்கா ஊழல் மற்றும் சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளில் செய்து வரும் ஊழல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், முன்னாள் எம்பி., கந்தசாமி, அந்தியூர் செல்வராஜ், சந்திரகுமார், மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணி, பழனிச்சாமி, குமார் முருகேஷ், செல்லப்பொன்னி, சின்னையன், பிரகாஷ், திருவாசகம், முருகேஷ், குமாரசாமி, மகளிர் அணி இளமதி, திலகவதி, தொமுச குழந்தைசாமி, பகுதி கழக செயலாளர்கள் நடராஜன், ராமச்சந்திரன், குமாரவடிவேல், அக்னி சந்துரு, செல்வராஜ், மணிகண்ட ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சாமி, குணசேகரன், சின்னுசாமி, தோப்பு சதாசிவம், காட்டு சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதனையடுத்து மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தற்கு இணங்க, அதிமுக அரசின் மிகப்பெரிய ஊழல்கமை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதிமுக.,வினர் வீடுகளில் சிபிஐ, வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் மூலம் ஊழல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அந்த நிகழ்வின் அடிப்படையில் அதில் சம்மந்தபட்டவர்கள் பதவி விலக அல்லது பதவி நீக்க செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றார். கோபி: கோபி மற்றும் நம்பியூரில் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக அரசின் அவலங்களை விளக்கியும், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய  டி.ஜி.பி.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி  விலக வலியுறுத்தியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  தமிழகம் முழுவதும் நேற்று திமுக.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக., சார்பில் கோபி பேருந்து  நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் நாகராஜ் தலைமை  தாங்கினார். மாவட்ட செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவர் அணி மாவட்ட  அமைப்பாளர் டாக்டர்.கரியமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி,  ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், துணைச்செயலாளர் மெய்யழகன், அவைத்  தலைவர் கணேசன், முன்னால் நூற்பாலைத்தலைவர் கள்ளிப்பட்டி மணி, மாவட்ட  பகுத்தறிவு கலை இலக்கிய அணி நிர்வாகி தென்றல் ரமேஷ், டி.என்.பாளையம் ஒன்றிய  பொறுப்பாளார் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நம்பியூர் ஆர்ப்பாட்டம்: நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய  பொறுப்பாளர் மெடிக்கல் செந்தில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்  நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட  திமுக.,வினர் கலந்து கொண்டனர்.

Related Stories: