சுகாதார விழிப்புணர்வு கையேடு வெளியீடு

திண்டுக்கல், செப். 19: தூய்மை சேவை சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் வினய் தலைமை வகித்தார். தூய்மைப்பணிகளை மேற்கொண்டு முன்மாதிரியான மாவட்டமாக கொண்டு வருவது என்ற உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், உதவித்திட்ட அலுவலர் அருணாச்சலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுகாதார விழிப்புணர்வு பயிற்சி குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: