இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், செப். 19: எச்.ராசாவை கைது செய்ய கோரி திண்டுக்கல், பழநியில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேடசந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துஐற அலுவலகங்கள் முன்பு பணிகளை புறக்கணித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் பாண்டியன்நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராசாவை கண்டித்தும், அவரது படத்திற்கு கருப்பு மையை ஊற்றியும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் கணபதி முருகன், இந்து சமய அறநிலையத்தறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாலமுருகன், மாவட்ட திருக்கோவில்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பழநியிலும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்

டனர்.ஒட்டன்சத்திரத்தில் வழக்கறிஞர் சங்க கூட்டம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தை பற்றி தவறாக பேசி நீதிமன்றத்தின் மாண்பினை சீர்குலைத்த எச்.ராஜாவை உடனடியாக கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும்.

Related Stories: