காடையாம்பட்டி பகுதியில் விவசாய கருவிகள் விற்பனை ஜோர்

காடையாம்பட்டி, செப்.19: காடையாம்பட்டி பகுதியில், விவசாய கருவிகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் உழவு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதனால், தற்போது விவசாய கருவிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு காடையாம்பட்டி பகுதியில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் முகாமிட்டு விவசாய கருவிகளை தயார் செய்து சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். இதில் மண் வெட்டி, கடப்பாரை, கோடாரி, கதிர் அரிவாள், கலப்பை என அனைத்து விவசாய கருவிகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை சுற்றுவட்டார விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ₹100 முதல் 700 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Related Stories: