ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் நேரப்பிரச்னையால் டிரைவர்கள் தகராறு

ஆட்டையாம்பட்டி, செப்.19: ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் ஆட்டையாம்பட்டி வழியாக தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது.

 இதில் காலையில் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என 500க்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர். ஆனால் பஸ் ஸ்டாண்டில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை நேரத்திற்கு ஏற்றபடி எடுக்காமல் டிரைவர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக சேலம்-ஈரோடு செல்ல வேண்டிய வழிதடத்திலும், ஆட்டையாம்பட்டி-சேலம் செல்ல வேண்டிய தனியார் பஸ்களிள் டிரைவர்கள் காலதாமதம் செய்கின்றனர். இதனால் மற்ற அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் காத்துக்கிடக்க வேண்டி உள்ளது.இவ்வாறு தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேண்டும் என்றே, கால தாமதம் செய்கின்றனர். இதன் காரணமாக தனியார் பஸ் டிரைவர்கள், அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.

எனவே ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில், அரசு போக்குவரத்து அதிகாரிகள் உரிய நேரத்தில் பஸ்களை எடுக்க நேர காப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டில் உலா வரும் புரோக்கர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பயணிகள் கூறியதாவது:ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ் டிவைர்கள் வேண்டும் என்றே, அரசு பஸ்கள் வெளியே செல்ல முடியாதபடி குறுக்காக பஸ்களை நிறுத்தியும், புரோக்கர்களுக்கு ஆதரவாக குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்களை எடுக்காமல் உள்ளனர். இதை தவிர்க்க பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து போலீசார் நேரப்பிரச்னையை ஏற்படுத்தும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: