மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சாலை விபத்துகளில் 347 பேர் பலி: கடந்த ஆண்டைவிட குறைவு என போலீசார் தகவல்

வேலூர், செப்.18: வேலூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவு என போலீசார் தெரிவித்துள்ளனர். உலகில் அதிகளவில் விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் மூலம் விபத்தில் அதிகப்படியான மக்கள் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அதேபோல் மாநிலங்களில் சாலை விபத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. வேலூர் மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதுதவிர மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வந்தது. இதையடுத்து சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விபத்து நடைபெறும் பகுதிகளில் 1 கிலோ .மீட்டர் இடைவௌியில் எல்இடி பல்புகள் அமைக்கப்பட்டு விபத்து எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடங்கி நேற்று வரை 492 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். லேசான காயமடைந்தவர்கள் 1459 பேர். 20 விபத்துகளில் வாகனங்கள் தேசமடைந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு நேற்றைய தேதி வரை நடந்த விபத்துகளில் 347 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயமடைந்தவர்கள், 1406 பேர் சேலான காயமடைந்தவர்கள், 29 விபத்துகளில் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: