கும்பாபிஷேகத்தையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி, செப்.12:  இடைப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசை பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இடைப்பாடி அருகே, வெள்ளாண்டி வலசை பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை ெதாடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: