திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

மணப்பாறை,செப்.12: மணப்பாறை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  துவரங்குறிச்சி அருகே லிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (28). இவர் சென்னையில் இடியாப்ப கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்னை சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அழகர்சாமி மனைவியை சென்னையிலேயே தங்க வைத்துவிட்டு அவர் மட்டும் தனியாக லிங்கம்பட்டி வந்துள்ளார்.இங்கு வந்ததும் நேற்று முன்தினம் இரவு நாட்டார்ப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் அழகர்சாமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது லிங்கம்பட்டி-நாட்டார்பட்டி இடையே சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்ட  நிலையில் அழகர்சாமி பிணமாக தொங்கினார்.தகவலறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மனப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: