திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கட்சியினர் பங்கேற்க கே.என்.நேரு அறிவுறுத்தல்

திருச்சி,செப்.12: திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் வரும் 14ம் தேதி திருச்சியில் நடக்கிறது.இதுகுறித்து திருச்சி மாவட்ட செயலாளர்கள் தெற்கு கே.என்.நேரு, வடக்கு தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். விழுப்புரத்தில் வரும் 15ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18ம் தேதி ஊழல் அதிமுக அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க இக்கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: