ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக்குங்கள்!

நன்றி குங்குமம் தோழி

தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் நேரத்தை  வீணடிக்காமல், ஓய்வு நேரத்தை சரியான  முறையில்  செலவிட்டால்,  வாழ்வில்  வெற்றிஅடையலாம். ஓய்வு நேரத்தை எப்படி  செலவிடலாம் என்று  பார்ப்போம்:

தூக்கத்தை ஒழுங்குபடுத்து போதிய உறக்கமின்றி எழுந்தால்,  அந்த நாளை அது சோம்பலாக்கி, வேலையில் கவனக்குறைவையும் ஏற்படுத்துகிறது. ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் இரவு 9.30 மணிக்கு உறங்கச் சென்று, ஒவ்வொரு நாளும் 7 மணி நேர உறக்கத்தை மேற்கொள்வார். பேஸ்புக் சி.ஓ.ஓ ஷெர்ல் சாண்ட்பெர்க் உறங்கும் முன் தனது மொபைலை ஆப் செய்துவிடுவாராம். இதன்மூலம் தேவையற்ற தொந்தரவுகளை தவிர்க்கலாம் என்கிறார். குறைந்தபட்சம் 7 மணி நேர உறக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அளிக்கும்.

புத்தகம் படிக்கலாம்

படிப்பதில் நேரத்தை முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். அதாவது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாது, திறன்களை வளர்க்கவும், தகவல் தொடர்பு மேம்பாடு, வார்த்தைக் களஞ்சிய மேம்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. அது நாவலாகவோ அல்லது வேறு வகையான புத்தகமாகவோ இருக்கலாம். புத்தகம் படிப்பது  மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது என்றுமே நம்முடைய  நேரத்தை  பயனுள்ளதாக்குகிறது.  அன்றைய நாள் முழுவதையும்  சுறுசுறுப்பாகவும்  வைக்கிறது. விர்ஜின் குரூப் நிறுவனரும், தொழிலதிபருமான 68 வயதான ரிச்சர்ட் பிரான்சன் கூறுகையில், உடற்பயிற்சியானது இருமடங்கு நன்மைகளைத் தருகிறது. மேலும் எனது தன்னம்பிக்கை அளவு, கற்பனைத்திறன், கவனிக்கும் ஆற்றல், நினைவாற்றல், புத்திக்கூர்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்றார்.

‘NO’ சொல்லத் தயங்காதீர்

நாம் அனைவரும் எல்லா விஷயங்களிலும் திறன் படைத்தவர்கள் இல்லை. எனவே தெரியாத விஷயங்களுக்கு  ‘தெரியாது’என தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது. இதன்மூலம்  நேரத்தை விரயமாக்காமல், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் அதிக நேரத்தை செலவிட முடியும்.கற்றுக்கொள்புதுப் புது விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், கற்பதற்கும்   வயது எப்போதும் ஒரு தடையில்லை.  அதற்காக  செலவிடும் நேரம்  எப்போதும்  பயனுள்ளதாகவும், வாழ்க்கையில் வெற்றியடையவும்  வழிவகுக்கும்.  இதன்மூலம் உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

தொகுப்பு : தவநிதி.

Related Stories: