கோடைகால சரும வறட்சியை போக்கும் வெள்ளரி!

நன்றி குங்குமம் தோழி

ஆயுர்வேத டாக்டர் கவுதமன் கிருஷ்ணமூர்த்தி

உணவுக்காகவும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் தாவரமாக வெள்ளரி இருக்கிறது. இதன் காய் மட்டும் இல்லை, இலை, பூ, வேர் அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். விதையை எடுத்துவிட்டு சதையை மட்டும் அரைத்து மருந்தாக சாப்பிடலாம். சருமத்தில் முகப்பரு, தோலில் கருமை நிற மாற்றங்கள், வயிறு மற்றும் மாதவிலக்கு பிரச்னை, கருமுட்டை கட்டிகளால் ஏற்படும் மாதவிலக்கு கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு வெள்ளரிக்காய் அருமருந்தாக இருக்கிறது. வெள்ளரிச் செடியின் இலையை கொட்டைப்பாக்கு அளவு விழுதாக அரைத்து, அல்லது 30 மிலி சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பிரச்னைகள் தீரும்.ஆண்களின் உயிரணுக்கள் பிரச்னைக்குத் தீர்வு!

அடிவயிற்று வலி, மாதவிலக்கு வயிற்று வலி, தலைமுடி பிரச்னை, வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு தீர்வாக வெள்ளரிக்காய் கொடியின் இலை பயன்படுகிறது. ஆண்களுக்கு இனப்பெருக்க மண்டல உயிரணுக்கள் பிரச்னைக்கு உபயோகப்படுத்தும் மருந்தாகவும் வெள்ளரிக்காய் இருக்கிறது. கிரேக்க-ரோமானியர்கள் வெள்ளரிக்காயை அழகுக்கும் உபயோகப்படுத்தி இருப்பதாக குறிப்புகள் இருக்கின்றன.

பொதுவாக தோலுக்கு வறட்டுத் தன்மையை நீக்கி பொலிவைக் கொடுக்கும் காரணியாக வெள்ளரி திகழ்கிறது. இதனை அரைத்து முகத்தில் மட்டுமின்றி உடலெங்கும் பூசிவிட்டு அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க கோடைகாலத்தில் ஏற்படும் சரும வறட்சி நீங்கும். சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால், வெள்ளரியை அரைத்து தொடர்ந்து அரிப்பு உள்ள இடங்களில் பூசி பிறகு வெந்நீரில் குளிக்க அரிப்பு பிரச்னை நீங்கும்.

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு!

பித்தப்பை கற்கள் இருந்தால் வெள்ளரிக்காய் விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து ஜூஸாக பருகவும். தொடர்ந்து 100 நாட்கள் செய்து வர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்ட பித்தப்பை கற்கள் கூட 50% கரைந்தே போயிருக்கும். பின்னர் தொடர்ந்து சாப்பிட்டு வர முற்றிலுமாக பித்தப்பை கற்கள் கரைந்து போகும். வெள்ளரிக் கொடியின் வேர் சொரியாசிஸ் நோய்க்கு அரு மருந்து என்று சொல்லலாம். கொடியின் வேர் 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 300 மி.லியாக குறைத்து, காலை, மதியம், இரவு என்று பருகி வர சொரியாசிஸ் நோயின் அரிப்புகள் குறைந்து மாற்றம் ஏற்படும்.

மஞ்சள் காமாலை

பசியின்மை, எரிச்சலோடு மஞ்சள் நிறமாக சிறுநீர் கழிவது போன்ற பிரச்னைக்கு மிகப்பெரிய மருந்து வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயின் தசைப்பற்று மட்டும் எடுத்து 100 மி.லி மோரில் கலந்து காலை, மதியம் என்று பருகி வர மஞ்சள் காமாலை, எரிச்சலுடன் சிறுநீர் கழிக்கும் பிரச்னை சரியாகும். பலருக்கு கோடைகாலத்தில் தலையில் கட்டி இருக்கும். இதற்கு வெள்ளரிக்காயை அரைத்து வாரத்துக்கு ஒருமுறை தலையில் பேஸ்ட் போல போட்டு குளித்து வந்தால் கட்டிகள் வராமல் இருக்கும்.

The post கோடைகால சரும வறட்சியை போக்கும் வெள்ளரி! appeared first on Dinakaran.

Related Stories: