எறிபந்து பேட்டியில் சாந்தி விஜய் பள்ளி வெற்றி

ஊட்டி,செப்.10:  மாவட்ட   அளவிலான எறிபந்து போட்டி ஊட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி   மைதானத்தில் நடந்தது. 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில், இறுதி   போட்டியில் ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும்,   கோத்தகிரி புனித மேரிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் மோதினர். இதில்,   சாந்தி விஜய் பெண்கள் பள்ளி மாணவிகள் அணி வெற்றி பெற்றது.  19  வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில், ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்   பள்ளியும், கோத்தகிரி புனித மேரிஸ் பள்ளி மாணவிகள் பள்ளி அணியும் மோதின. இதில்,   சாந்திவிஜய் பெண்கள் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதிற்குட்பட்ட   ஆண்களுக்கான பிரிவில், அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும், எடக்காடு அரசு   மேல்நிலைப் பள்ளியும் ேமாதின. இதில், அதிகரடி அரசு மேல்நிலைப் பள்ளி அணி   வெற்றிப் பெற்றது. 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில், எடக்காடு அரசு   மேல்நிலைப் பள்ளி அணியும், அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும் மோதின.   எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.

Related Stories: