கல்வி உபகரணம் வழங்கும் விழா

ஒட்டன்சத்திரம், செப். 11: ஒட்டன்சத்திரம் காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வஉ.சிதம்பரனாரின் 175வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வஉசி பேரவையின் முன்னாள் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகிக்க அனைத்து பிள்ளைமார் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் மாடசாமி, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை அங்கையற்கண்ணி வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் பாலமுருகன், கிராம நிர்வாக உதவியாளர்கள் பைசல்முகமது, தனபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் பாப்புச்சாமி நன்றி கூறினார்.

Related Stories: