கிருஷ்ணகிரி, ஆக.17: பர்கூர் அருகே ஐகுந்தம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளியான இவரது மகள் அபிராமி(12). படிக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 13ம் தேதி முருகன் மற்றும் குடும்பத்தினர் கூலி வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். மாலை வீடு திரும்பியபோது அபிராமி சாணிப்பவுடர் கரைத்து குடித்து, மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே, அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீஸ் எஸ்.ஐ. ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து, சிறுமி அபிராமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
