700 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

போச்சம்பள்ளி, ஜன. 6: பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வாடமங்கலம் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். ஒன்றிய துணை செயலாளர்கள் காந்தி கோவிந்தசாமி, தட்ரஅள்ளி ரமேஷ், சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி வெங்கடேசன், மூர்த்தி, துரைசாமி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட பிரதிநிதி மணி, சந்துரு, கவுன்சிலர்கள் சுரேஷ், வடிவேல் ஆகியேர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு 700 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாதவி முருகேசன், பாஸ்கர், வெண்ணிலா முருகேசன், மகேஸ்வரி சங்கர், ரஜேந்திரன், சசிகுமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் அருள் நன்றி கூறினார்.

Related Stories: