தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

ஊத்தங்கரை, ஜன.1: ஊத்தங்கரை பேரூராட்சியில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி, 2026 காலண்டர் வழங்கி, புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெரியசாமி, கிருபாகரன், ஆடிட்டர் லோகநாதன், சேகர், மோகன்ராஜ், ஆனந்தகுமார், மாரியப்பன், சுகுணா மற்றும் ஓட்டுநர்கள், மேற்பார்வையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வெங்கடேசன் வரவேற்றார். ராஜூ நன்றி கூறினார்.

 

Related Stories: