தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஜன.3 கொல்லப்பள்ளி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம், பீமாண்டப்பள்ளி ஊராட்சி கொல்லப்பள்ளி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் விடியல் பயணம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து இடம்பெற்றிருந்தது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கியது, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல், விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு வானவில் திட்டம், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு தொழில்சார் கடனுதவிகள் வழங்குதல், மீண்டும் மஞ்சப்பை, சர்வதேச மலர் ஏல மையம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம், மக்களுடன் முதல்வர், உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, உங்களைத் தேடி உங்கள் ஊரில், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சியை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Related Stories: