இந்த மனுவால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செங்குணம் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர்,ஆக.14:  பெரம்பலூர் அருகேஎள்ள செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் தேரோட்ட விழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன்படி கடந்த ஜூலை 30ம்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. கடந்த 6ம்தேதி இரவு காப்பு கட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை கடந்த ஒரு வாரமாக இரவில் வான வேடிக்கை மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் மாரியம்மன் அன்னவாகனம், மயில்வாகனம், சிம்மவாகனம், வெட்டு குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. 12ம்தேதி பகலில் பால்குடம் எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகளும், மாலையில் தீ மிதித்தல் நிகழ்ச்சியும், இரவில் பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி ேகாலாகலமாக  நடைபெற்றது. தேரோட்ட திருவிழாவில் செங்குணம் கிராமத்தினர் மட்டுமன்றி சுற்றுவட்டாரங்களில் உள்ள அருமடல், பாலாம்பாடி, சிறுகுடல், கீழப்புலியூர், கவுள்பாளையம், சித்தளி, பீல்வாடி, பேரளி, அசூர், எளம்பலூர், தண்ணீர்பந்தல், இந்திராநகர், வாலிகண்டபுரம்,  துறைமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: