கம்பன் கழக விழா

ராமநாதபுரம், ஆக.14:  ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிக்கோமான் கம்பன் விழா கருத்தரங்க கோவை நடைபெற்றது. கம்பன் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கோடூர் ரமணி சாஸ்திரி வரவேற்றார். தமிழ் சங்கத்தின் தலைவர் அப்துல்சலாம் தலைமை தாங்கி கம்பனின் எண்ணங்களும், வண்ணங்களும் என்ற தலைப்பில் பேசினார். ஜெயகௌரி கம்பனின் சொல்வளம் என்ற தலைப்பிலும், செயங்கொண்டான் கம்பனின் மனிதநேயம் என்ற தலைப்பிலும், பேராசிரியர் சிதம்பரம் கம்பனின் அறமும் மறமும் என்ற தலைப்பிலும், டாக்டர் குலசேகரன் கம்பனில் அடியும் முடியும் என்ற தலைப்பிலும் பேசினர்.

பாடகர் வாசு கம்பன் கவியரசரின் திறமை என்ற தலைப்பில் இலக்கிய இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார். சங்கத்தின் துணைத்தலைவர் விவேகானந்தன் சிறப்பு விருந்தினர்களுக்கு ‘புதிய இந்தியாவை படைப்போம்’ என்ற புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார். செயலாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் கருணாநிதி, பொருளாளர் மங்களசுந்தரமூர்த்தி மற்றும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: