மொட்டையடித்து அஞ்சலி செலுத்தியோருக்கு வேட்டி புன்னம் சத்திரம் கடைவீதியில் போக்குவரத்து இடையூறாக கனரக வாகனங்கள் நிறுத்தம்

க.பரமத்தி, ஆக.13: க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி சத்திரம் கடைவீதியில் நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் சத்திரம் கடைவீதிக்கு வந்து பஸ் ஏறி கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதில் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு வாகனங்களில் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் சத்திரம் கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல்கள், டீ கடைகள் முன் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்களை சிலர் நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சிறு, சிறு விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.  இவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கும்முன் விதி மீறி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: