காஷ்மீர் இல்லாத இந்திய மேப் டிவிட்டர் மீது புதிய வழக்குகள் பதிவு

நொய்டா: டிவிட்டர் வலைதளத்தில் சர்ச்சைக்குரிய இந்திய வரைபடம் வெளியாகி இருந்தது. அதில் யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், லடாக் தனிநாடாக குறிப்பிடப்பட்டு  இருந்தது. இதனால், கொதித்து எழுந்த நெட்டிசன்கள் டிவிட்டர் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டனர்.  இதுதொடர்பாக, மேற்கு உத்தர பிரதேச பஜ்ரங் தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் பாட்டீ புலந்தர் மாவட்டத்தின் குர்ஜா நகர காவல் நிலையத்தில் டிவிட்டர் மீது புகார் அளித்தார். அதில், `இது ஏதேச்சையாக நடந்தது அல்ல. டிவிட்டர் நிறுவனத்தின் இந்த செயல் இந்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி, செய்தி பிரிவு தலைமை அதிகாரி அம்ரிதா திரிபாதி மீது தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மாநிலத்தில் மணீஷ் மீது பதிவு செய்யப்படும் 2வது வழக்கு இது. அதே போல, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி.யுமான திக்விஜய் சிங், ஜம்முவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சட்டப்பிரிவு 370ஐ திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கும் என்று தான் பேசியதாக, அரசியலமைப்புக்கு முரணாக திரித்து செய்தி வெளியிட்டதாக டிவிட்டர் மீது குற்றம்சாட்டி, இம்மாநில சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உபி அரசு  மேல்முறையீடுஉத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் இஸ்லாமியர் ஒருவரை சில நபர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிடச் சொல்லி தாக்குவது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இது போலி என்று தெரிந்தது. இந்த வீடியோவை உடனடியாக நீக்காத காரணத்தால், டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய செயல் அதிகாரியான மணிஷ் மகேஸ்வரி மீது உபி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை விசாரணைக்கு அழைத்தனர். இதை எதிர்த்து மணிஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், அவரை கைது செய்யக்கூடாது என உபி போலீசுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உபி அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது….

The post காஷ்மீர் இல்லாத இந்திய மேப் டிவிட்டர் மீது புதிய வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: