நகம் சொல்லும் சேதி

நன்றி குங்குமம் தோழி

*நகங்கள் ‘கெரட்டின்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கடினமான புரோட்டீன் பொருளால் ஆனது.

*மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது.

*நகத்தின் வளர்ச்சி மற்றும் தோற்றம் மனித உடல் நலத்தின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது.

*நகங்களை உன்னிப்பாக கவனித்தால் உடலில் என்னப் பிரச்னை என்று அறிந்து கொள்ளலாம்.

*நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் ‘சயனோஸி’ என்று சொல்லப்படும். நோயின் அறிகுறி இருக்கிறதென்று பொருள். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கிறது.

*மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

*நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதால் நிக்கோடின் கறைபடிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.

*மங்கலான நீண்ட கோடுகள் தோன்றினால் மூட்டுவலி என்பது பொருள்.

*இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும்.

*நகத்தில் சின்னச் சின்ன குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் ‘சொரியாசிஸ்’ என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.

*நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால், அது மெலனோ மாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறி என்பது பொருள்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

Related Stories: