தஞ்சை, ஜூன் 21: தஞ்சை மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சை மார்க்கெட்டில் 10 மொத்த விற்பனையாளரும், 50 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாளர்களும் உள்ளனர். இங்கு பல்லடம், உடுமலைப்பேட்டை, செட்டிகுளம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 30 டன் சின்ன வெங்காயமும், பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 70 டன் பெரிய வெங்காயம் தினமும் விற்பனைக்கு வருகிறது. இம்மார்க்கெட்டில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர் வாசிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். இதனால் தினந்தோறும் பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.