தனியார் துறையில் ஜூன் 23ல் வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம், ஜூன் 21: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள முகம்மது சதக் தஸ்தாஹீர் கல்வியியல் கல்லூரியில், அமைச்சர் மணிகண்டன் தலைமையில் வரும் 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் கம்பெனியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் தொழிற்கல்வி டிப்ளமோ படித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோர் தங்களது அனைத்து அசல் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வரவேண்டும்.இதனை கலெக்டர் நடராஜன தெரிவித்துள்ளார்.

Related Stories: