ஆரோக்கிய வாழ்க்கைக்கு 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதிகள் ஆகும். சமசீர் உணவுமுறை ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவும். மேலும்,  நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

உடற்பயிற்சியை வழக்கமாக்குங்கள்

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான  உடற் பயிற்சியை மேற்கொள்வது  அவசியம். அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு 75 நிமிடங்கள்  தீவிர  உடற்பயிற்சியில்  ஈடுபடுவது  நல்லது. தினசரி  மேற்கொள்ளும் உடற்பயிற்சி  மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும்,  பதற்றம் மற்றும் மனச்சோர்வை தடுக்கிறது.

பரிசோதித்துக் கொள்ளுங்கள்

அவ்வப்போது   உடலை பரிசோதித்துக் கொள்வது நல்லது.  இதன்மூலம்  நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் , அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது. சரியான நேரத்தில்  செய்து கொள்ளும் பரிசோதனை  மற்றும் சிகிச்சை  உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

ஆரோக்கியமான, சீரான உணவு உண்பது  உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மற்றும்  இதயத்தை  சீராக துடிக்க வைக்கிறது, மேலும், மூளை சுறுசுறுப்பாக செயல்பட  தசைகள் வேலை செய்கிறது. மென்மையான உணவுகளை உண்ணுங்கள்.  உதாரணமாக, பெர்ரி பழங்கள், அவகோடா பழம்,  சாமன் மீன்,  பச்சையம் நிறைந்த கீரைகள், ஆப்பிள், கீரின் டீ, முட்டை,  பருப்பு வகைகள், கொட்டை வகைகள்,  இஞ்சி,  பூண்டு போன்றவை உண்ணலாம்.

நிறைய  தண்ணீர்  குடிக்கவும்

தண்ணீர்  நிறைய  குடிக்க வேண்டும்.  இது  நமது உடலில்  உள்ள கழிவு ப்பொருட்கள் மற்றும் நச்சுகளை  சுத்தப்படுத்த உதவுகிறது. தண்ணீர்  நிறைய  அருந்துவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  மேலும், தண்ணீர் நிறைய அருந்துவது  உடல் சோர்வு , குறைந்த ஆற்றல் மற்றும் தலைவலியிலிருந்து காக்கிறது.

நன்கு உறங்கவும்

உடலில்  ஆற்றலை  அதிகரிக்கவும்,   உணர்வுகளை  கட்டுக்குள் வைத்து நல்வாழ்வை மீட்டெடுக்கவும்  தூக்கம் அவசியமாகிறது.நல்ல தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்கிறது மேலும் கவனக்குறைவைக் குறைக்கிறது. உங்கள் மனநிலையை உயர்த்துகிறது. மற்றும் மனச்சோர்வை விலக்குகிறது. தூக்கம் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மற்றும் எடையை நிர்வகிக்கிறது.

தொகுப்பு : ரிஷி

Related Stories: