நிழல் ராஜ்ஜியம் நடத்தி அராஜகம் உ.பி. தாதா கும்பல்களிடம் இருந்து ₹1,128 கோடி சொத்துகள் பறிமுதல்: ரவுண்டு கட்டி அடிக்கிறது போலீஸ்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தாதா கும்பல்களிடம் இருந்து ரூ.1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் ஜாதிவாரியாக தாதா கும்பல்கள் அதிகளவில் உள்ளன. மாவட்டங்களை பிரித்துக் கொண்டு, அரசுக்கு போட்டியாக இவர்கள் நிழல் ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு தன்னை பிடிக்க வந்த 8 போலீசாரை பிரபல தாதா விகாஷ் துபேசுட்டுக் கொன்றதை தொடர்ந்து, தாதா கும்பல்கள் மீதான அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். துபேவை சுட்டுக் கொன்றது மட்டுமின்றி, அவன் குவித்து வைத்திருந்த பல நூறு கோடி சொத்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற தாதா கும்பல் தலைவன்களும் கைது செய்யப்பட்டு, அவர்களின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.1,128 கோடி.  கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஏப்ரல் வரை, இம்மாநிலத்தில் சட்ட விரோத கும்பல்கள் மீது 5,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 22,259 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரி இப்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான். இவனுக்கு சொந்தமான ரூ.194 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், குஜராத் சிறையில் உள்ள தாதா அட்டீப் அகமதுவிடம் இருந்து ரூ.325 கோடி சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதேபோல், சோன்பத்ரா சிறையில் உள்ள சுந்தர்பாட்டியின் ரூ.63 கோடி மதிப்புள்ள சொத்துகளும், பாலியா சிறையில் உள்ள தாதா குந்து சிங்கின் ரூ.17 கோடி சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன….

The post நிழல் ராஜ்ஜியம் நடத்தி அராஜகம் உ.பி. தாதா கும்பல்களிடம் இருந்து ₹1,128 கோடி சொத்துகள் பறிமுதல்: ரவுண்டு கட்டி அடிக்கிறது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: