கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை சேலம் சென்றார். அதனை தொடர்ந்து இன்று காலை சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்;

அதிமுக - பா.ஜ.க. கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. இங்கே இருக்கின்ற தலைவர்களும் மத்தியில் உள்ள தலைவர்களே கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது ஜனநாயக உரிமை என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி இறுதியானது என அமித் ஷா கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி; மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை இறுதி செய்பவர்கள். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். மேலும், அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணையவேண்டும் என்பதே விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: