அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.! எடப்பாடி பழனிசாமி பேச்சு

விழுப்புரம்: மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான், கட்சியை நல்லமுறையில் வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன் என்று கூறினார்.

மேலும் பேசிய இபிஎஸ், நமது அதிமுக இயக்கம் பல சோதனைகளை சந்தித்து தான் வந்திருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் தொண்டாற்றுவோம், இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்ட கனவை நாம் ஒன்றாக செயல்படுத்தவேண்டும் என்று கூறினார். அதிமுகவை வீழ்த்த யாராலும் வீழ்த்த முடியாது, வரும் தேர்தல் அதிமுகவிற்கு விடிவு காலம். அதிமுக ஆட்சி அமைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை, ஆட்சி அமைய தொடர்ந்து உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: