மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு தொற்று உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 2,994 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கிட்டதட்ட மக்கள் மறந்து போகும் அளவிற்கு இயல்பு வாழ்க்கை கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை பல மாதங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்றைய பாதிப்பு சற்று குறைந்தது. இந்நிலையில் இன்றைய பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,354ல் இருந்து 18,389ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரேநாளில் 1,784 பேர் குணமடைந்த நிலையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,47,18,781லிருந்து 4,47,22,605ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: