ஏப்ரல் 1 இன்று மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும்: வந்தேபாரத் ரயிலை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

போபால்: போபால் - டெல்லி இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்தியபிரதேசத்தின் போபால் - தலைநகர் டெல்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது 11வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் போபாலின் ராணி கமல்பதி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரம் 7 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.

இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லி - போபால் இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று ஏப்ரல் 1-ம் தேதி, மோடி அனைவரையும் முட்டாள் (April Fool) ஆக்குவதாக நமது காங்கிரஸ் நண்பர்கள் நிச்சயம் அறிக்கை கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் பாருங்கள். இந்த ரயில் ஏப்ரல் 1ம் தேதியே தொடங்குகிறது. இது தான் நமது திறமை, நம்பிக்கையின் அடையாளம் என்றார்.

Related Stories: